தற்கொலைக்கு முயன்ற நடிகை அனுயா…. மார்பிங் விடியோவால் மனம் நொந்துபோனதாக கூறிய சம்பவம்……

0
30
Actress Anuya who tried to commit suicide said that she was heartbroken by the morphing video

ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுயா பகவத். முதல் படமே வெற்றிகரமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்பு குறைந்துகொண்டே போனது. அதற்கு காரணம் அவருக்கு எதிராக வெளியான ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் என சொல்லப்படுகிறது.

Actress Anuya who tried to commit suicide said that she was heartbroken by the morphing video 02

சமீபத்தில், பாடகி சுசித்ரா சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். அதில் நடிகை அனுயாவின் வீடியோவும் வெளியாகியது. இதனால் அனுயா பகவத் சர்ச்சையில் சிக்க சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.

Actress Anuya who tried to commit suicide said that she was heartbroken by the morphing video 03

அண்மையில் ஒரு பேட்டியில் அனுயா பேசும்போது, அந்த மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன், அந்த நேரத்தில் பிரச்சனையை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை.தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியது என் குடும்பம் தான்.

Actress Anuya who tried to commit suicide said that she was heartbroken by the morphing video 04

என் குடும்பம் இல்லை என்றால் நான் இன்று உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். என்னை அவர்கள் புரிந்துகொண்டு துணையாக இருந்ததால் தப்பித்தேன் என சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு புறம் தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் மறுபுறம் நேரெதிரான விஷயங்களையும் தருவது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறி வருகின்றனர்.