இறந்து விட்டதாக கூறி நாடகமாடிய நடிகை பூனம் பாண்டே… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

0
21
Actress Poonam Pandey who made a drama by saying that she is dead netizens are furious

பாலிவுட் பிரபலமான பூனம் பாண்டே, நேற்று தனது 32ஆவது வயதில் உயிரிழந்து விட்டதாக அவரது சமூக வலைதள பக்கங்களில் கூறப்பட்டது. வழக்கமாக எந்த பிரபலங்கள் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்தினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், பூனம் பாண்டே குடும்பத்தினர் இடமிருந்து மேற்கொண்டு அதைப்பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் பேசப்பட்டது.

Actress Poonam Pandey who made a drama by saying that she is dead netizens are furious 02

இதனால் ரசிகர்களுக்கு பூனம் பாண்டேவின் இறப்பு மீது சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் பூனம் பாண்டே இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் உயிருடன் இருப்பதாகவும் கருப்பை வாய் புற்றுநோய் தனது உயிரை பறிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், ‘ஆனால் அதே போல கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான பெண்களால் கூற முடியாது.’ என பேசிய அவர், இந்த புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க கூடியது என்று கூறியிருக்கிறார்.

Actress Poonam Pandey who made a drama by saying that she is dead netizens are furious 03

இதை தடுக்க HPV தடுப்பூசியினை கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்த நோய் பாதிப்பினால் இனி யாரும் உயிழக்க கூடாது என்றும் கூறியிருக்கிறார். இச்சமயத்தில் பூனம் பாண்டேவின் இறப்பை அடுத்து, இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்கள் அதிர்ச்சியை தெரிவித்து நேற்று முதல் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Actress Poonam Pandey who made a drama by saying that she is dead netizens are furious 04

ஆனால், இன்று அவர் உயிரிழக்கவில்லை என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். நேற்று பூனம் பாண்டேவிற்கு RIP போஸ்ட் போட்டு வந்த அவர்கள், இன்று அவரையே மீம் மெட்டீரியலாக மாற்றியுள்ளனர். மேலும் விழிப்புணர்வுக்கு எத்தனையோ வழிகள் இருக்கும் நிலையில் இறந்துவிட்டதாக கூறி நம்ப வைத்தது ஒரு தேவையற்ற பப்ளிசிட்டிதான் எனவும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.