நான் சினிமாவில் இருக்க முக்கிய காரணமே அவர் தான்… பிரபல இயக்குனர் குறித்து பெருமையாக பேசிய நடிகை பூர்ணா

0
28
Actress Poorna spoke proudly about the famous director because he is the main reason I am in cinema-01

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணா. 2004ம் ஆண்டு வெளியான “மஞ்சபோல் ஒரு பெண்குட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான பூர்ணா, இவர் தன்னுடைய 20 ஆண்டு திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

Actress Poorna spoke proudly about the famous director because he is the main reason I am in cinema 02

தற்போது ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யாவின் இயக்கத்தில் மிஷ்கின் இசையமைப்பில் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள ‘டெவில்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பூர்ணா. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Actress Poorna spoke proudly about the famous director because he is the main reason I am in cinema 03

அதில் கலந்து கொண்ட நடிகை பூர்ணா தன்னுடைய திரைப்பயணம் குறித்தும், அவர் படங்களை தேர்வு செய்வது குறித்தும் வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். நான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பதற்கு முக்கியமான காரணம் மிஷ்கின் சார் தான்.

Actress Poorna spoke proudly about the famous director because he is the main reason I am in cinema 04

அவர் தான் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுப்பார். “நீ உடல் பருமனா இருந்தாலும் சரி, ஸ்லிம்மாக இருந்தாலும் சரி நடிக்கிறதை மட்டும் விட்டுடாத” என சொல்வார். இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக கர்ப்பிணியாக நடித்தேன்.

Actress Poorna spoke proudly about the famous director because he is the main reason I am in cinema 05

மேலும் நான் சினிமாவில் நுழையும் போது ஹீரோயினாக நுழையவில்லை. சைட் கேரக்டரில் தான் நடித்து வந்தேன். அதனால் என்னால் ஹீரோயின் அல்லாத கேரக்டர் ரோலில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

Actress Poorna spoke proudly about the famous director because he is the main reason I am in cinema 06

கல்யாணத்துக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விடும் என எதிர்பார்த்தேன், ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு உடல் அதிகமா வெய்ட் போட்டுட்டேன்.

Actress Poorna spoke proudly about the famous director because he is the main reason I am in cinema 07

அந்நிலையில் நிறைய பேர் கேலி செய்து கமெண்ட் போஸ்ட் பண்ணுவாங்க. குழந்தை பெற்றவர்களுக்கு உடம்பு அப்படி தான் இருக்கும் என்பதை கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நான் குழந்தை பிறந்த 50வது நாள் ஷூட்டிங் வந்தேன். குடும்பம், குழந்தை என ஆகிவிட்டது. அதனால் பொறுப்புகளும் அதிகமாகிவிட்டது. இருந்தாலும் நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்” எனப் பேசி இருந்தார் நடிகை பூர்ணா.