ரசிகர்களை கவர நடிகை சன்னி லியோனின் புதிய திட்டம்…. வைரலாகும் அறிவிப்பு….!!!!

0
26
Actress Sunny Leones new project announcement goes viral to impress fans

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் இந்தியில் வெளிவந்த “ஜிஸ்ம் 2” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் தனது கவர்ச்சி நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த சன்னி லியோன்.

Actress Sunny Leones new project announcement goes viral to impress fans 02

இந்தி, மலையாளம், தமிழ் என தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சன்னி லியோன் கடந்த 2011ஆம் ஆண்டு “டேனியல் வெபேர்” என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திரையுலகில் நடிகையாவதற்கு முன்பே இவருக்கு திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sunny Leones new project announcement goes viral to impress fans 03

இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் கடந்த 2017ஆம் ஆண்டு 21 மாத குழந்தையாக இருந்த குழந்தையை தத்தெடுத்தனர். பின் 2018ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். படங்களில் நடிப்பதுடன் சேர்த்து தற்போது புது தொழில் ஒன்றையும் துவங்கியுள்ளார்.

Actress Sunny Leones new project announcement goes viral to impress fans 04

அதன்படி சினிமாவில் தான் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டல் தொழில்களில் முதலீடு செய்துள்ளார். “சிகா லோகா” என்கிற பெயரில் தொழில் தொடங்கியிருக்கும் சன்னி, பலவகையான வெரைட்டி உணவு வகைகளையும் வழங்குகிறார். இதில் முக்கியமாக ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் செலுத்தினால் போதும் அனைத்து உணவுகளும் அன்லிமிடெட்டாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.