கை, கால்களில் ஒரே வீக்கம்… துணியால் மறைத்தாலும் முகத்தில் தெரிகிறதாம்…. பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி…!!

0
9
adar sarma admitted in hospital
adar sarma admitted in hospital

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அடர் சர்மா. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நடிகையாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பட வாய்ப்புகளை தேடி வந்த இவர் 2009 ஆம் வருடம் “1920” என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் . முதல் படத்திலேயே நல்ல பாராட்டுகளை பெற்றார்.

adar sarma admitted in hospital
adar sarma admitted in hospital

இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்தது. தமிழில் இவர் சார்லி சாப்ளின் 2 என்ற படத்தில் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். அதன் பிறகு சிம்புவின் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். அதன் பிறகு தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்.

adar sarma admitted in hospital
adar sarma admitted in hospital

எனக்கு படை நோய் இருந்தது. இதனால் கை, கால்களில் அலர்ஜி ஏற்பட்டு வீக்கமாக இருக்கிறது. நான் முழு கை உடை அணிந்து அதை மறைத்திருக்கிறேன். ஆனால் மன அழுத்தத்தால் என்னுடைய முகத்தில் அது தெரிகிறது. நான் மருந்தையும் உட்கொண்டேன். அந்த மருந்தினால் எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டு குமட்டல் வருகிறது.

adar sarma admitted in hospital
adar sarma admitted in hospital

இதற்காக இன்னொரு ஊசியை போட்டுக் கொள்கிறேன் என்று பகிர்ந்து இருக்கிறார். இதனை அடுத்து திடீரென்று கடுமையான வயிற்றுப்போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதை எடுத்து தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.