நயன்தாரா த்ரிஷா வழியை பின்பற்றும் வாரிசு நடிகை….!!! சோலோ நாயகியாக களமிறங்கும் அதிதி…..!!!!

0
32
Aditi a successor to Nayanthara and Trisha will be seen as the solo female lead

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி, கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மாவீரனில் சிவகார்த்தியனுடன் நடித்திருந்தார். கிளாமர் பக்கம் செல்லாமல் குடும்ப குத்து விளக்காக வலம் வரும் அதிதி திருமணமான நடிகர்களின் படங்களில் மட்டுமே கமிட்டாகி வருகிறாராம்.

Aditi a successor to Nayanthara and Trisha will be seen as the solo female lead 02

இந்நிலையில் அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயின்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

Aditi a successor to Nayanthara and Trisha will be seen as the solo female lead 03

இவ்வாறு நடிப்பதன் மூலம் அப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு அந்த ஹீரோயினுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றோர் இதுபோன்ற கதைகளை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

Aditi a successor to Nayanthara and Trisha will be seen as the solo female lead 04

தற்போது அந்த வரிசையில் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரும் இணைந்துள்ளார். அதன்படி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அதிதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Aditi a successor to Nayanthara and Trisha will be seen as the solo female lead 05

மேலும் இப்படம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.