நண்பேன்டா…! ரசிகர்கள் அடிச்சிக்கிட்டாலும்…. நாங்க எப்பவுமே FRIENDS தான்…. தல-தளபதியின்  கியூட் வீடியோ…!!

0
7
AJITH VIJAY CUTE VIDEO
AJITH VIJAY CUTE VIDEO

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இவர்களுடைய படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள் கோளாகாலமாக கொண்டாடுவார்கள். அதே நேரத்தில் அஜித் விஜய் இருவரையுமே அவர்களுடைய ரசிகர்கள் எதிர் எதிராக வைத்து போட்டியாக பார்த்தும் வருகிறார்கள்.

AJITH VIJAY CUTE VIDEO
AJITH VIJAY CUTE VIDEO

ஆனால் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக மட்டுமல்லாமல் ஒருவரை ஒருவர் மனம் திறந்து பாராட்டியும் வருவார்கள். அஜித் விஜய் இருவருமே ஒரு காலகட்டத்தில் திரையுலகில் அடி எடுத்து வைத்த போது ராஜாவின் பார்வையிலே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்கள்.

AJITH VIJAY CUTE VIDEO
AJITH VIJAY CUTE VIDEO

இந்த படம் 1995 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இருவருமே மாறி மாறி ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோக்களாக மாறினார்கள்.

AJITH VIJAY CUTE VIDEO
AJITH VIJAY CUTE VIDEO

அஜித் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானால் அவர்களுடைய ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவும். ஆனால் விஜயும் அஜித்தின் பொது இடங்களில் பார்க்கும்போது நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய் அஜித்திற்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளிக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.