தனக்கு துரோகம் செஞ்சவரு தலைகுனியும்படி சம்பவம் செய்த அஜித்…. இப்படியொரு மனுஷனா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

0
12
ajith who returned the car driver loan-01

அஜித் வீட்டில் கார் டிரைவர் ஆக வேலை பார்த்த ஒருவர் வீட்டில் அஜித் இருக்கிறார் என்பதை தெரியாமல் ஒருவரிடம் அஜித் குறித்து தவறாக பேசியுள்ளார். இது அஜித்திற்கு தெரிந்ததால் ஆறு மாத சம்பளத்தை கொடுத்து வேலை விட்டு அனுப்பி விட்டாராம். இதனால் அவரும் வேலை விட்டு சென்று விட்டாராம்.

ajith who returned the car driver loan 02

இந்த நிலையில் ஒருநாள் காவல் நிலையத்திலிருந்து அஜித்திற்கு போன் வந்துள்ளது. அதில் அஜித் வேலையை விட்டு அனுப்பிய நபர் அங்கே இருப்பதாகவும் அவர் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாததால் காவல் நிலையம் அழைத்து வந்ததாகவும் சொல்லி உள்ளார்கள். உடனே அஜித் மேனேஜரை கூப்பிட்டு அது என்ன என்று பார்க்கச் சொல்லி உள்ளார் .

ajith who returned the car driver loan 03

விசாரித்த போது நடிகர் அஜித்திடம் வேலை பார்க்கும் பொழுது சம்பளம் வருகிறது கடனை எப்படியாவது அடைத்து விடலாம் என்று எண்ணி அந்த கடனை அவர் வங்கியில் வாங்கி இருக்கிறார் . ஆனால் எதிர்பாராத விதமாக அஜித்திடமிருந்து வேலையை விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் காவல் நிலையம் வரை வந்துள்ளது தெரியவந்தது.

ajith who returned the car driver loan 04

இதை கேள்விபட்ட அஜித் உடனே அவர் வாங்கிய கடனாக ஏழரை லட்சம் ரூபாயை கட்டியிருக்கிறார். இது குறித்து அஜித் பேசுகையில் என்னை பற்றி தவறாக பேசினாலும் அவரை நான் வேலை விட்டு நீக்கி விட்டேன். ஆனால் அவர் என்னை நம்பி கடன் வாங்கி இருக்கிறார். எனவே அந்த கடனுக்கு நான் தான் பொறுப்பு என்று கூறி இருக்கிறார்.