கல்யாணத்திற்கு அப்புறம் தான் தாம்பத்தியம்…. அதுவரை ஒரே வீட்டில் தனித் தனி கட்டில்…. ஆச்சர்யப்படுத்திய அமீர்-பவானி…!!

0
15
ameerbavani livingtogether life-01

தமிழில் ரெட்டைவால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி போன்ற சீரியல்கள் மூலமாக பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் முதலில் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டதால் அதிலிருந்து மீண்டு திரும்பவும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் பாவனி.

ameerbavani livingtogether life 02

அதன்பிறகு பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஐந்து சீசனில் கலந்து கொண்டு வெளியேறினார். இதற்கிடையில் வைல்டு கார்டு மூலமாக பிக் பாஸுக்குள் நுழைந்த நடன கலைஞரான அமீரோடு காதல் வயப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய காதலை ஏற்காமல் இருந்த பாவனி பிக் பாஸ் ஜோடிகள் இரண்டு சீசனில் தான் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

ameerbavani livingtogether life 03

அதிலிருந்து இவர்கள் இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தார்கள். இந்த நிலையில் அமீர் பாவனி ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி பெட்ரூமில் தான் படுத்து கொள்கிறார்களாம். ஒரே வீட்டில்  திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்றும் திருமணம் செய்த பிறகு தான் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுவோம் என்றும் சமீபத்தில் இவர்கள் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள்.

ameerbavani livingtogether life 04

சினிமாவில் ஓரளவிற்கு சாதித்து விட்டு திருமணம் செய்து கொள்ள முடிவில் இருப்பதாகவும் அதுவரை ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியாக ஏன் இருக்க வேண்டும் அதனால் தான் ஒரே வீட்டில் இருக்கிறோம். என்றும் இது அரேஞ் லிவின் டூ கெதர் வாழ்க்கை என்று கூறியிருக்கிறார்கள்.