ரம்யா பாண்டியன் வீட்டுல விஷேசமுங்கோ…. சீக்கிரம் டும் டும் நடக்கப்போகுது…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

0
9
ashok selvan marriage ramyapandiyan sister
ashok selvan marriage ramyapandiyan sister

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்த படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ashok selvan marriage ramyapandiyan sister
ashok selvan marriage ramyapandiyan sister

சில தினங்களுக்கு முன்பாக தான் இந்த படம் ஓடிடியிலும் வெளியானது. இந்த நிலையில் அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ashok selvan marriage ramyapandiyan sister
ashok selvan marriage ramyapandiyan sister

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி இருப்பதாகவும் இரு வீட்டார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ashok selvan marriage ramyapandiyan sister
ashok selvan marriage ramyapandiyan sister

கீர்த்தி பாண்டியனின் அக்கா தான் ரம்யா பாண்டியன் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தகவல் உறுதியான தகவல் என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக்செல்வனோ அல்லது கீர்த்தி பாண்டியனோ வெளியிடுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி வருகிறது.