அடடே…! விஷால் பட நடிகை பானு மகள் எப்படி இருக்காங்க தெரியுமா…? ஆம்மாவுக்கே டப் கொடுக்குறாரே…!! 

0
8
Banu-01

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நறுக்கின இடம்பிடித்தவர் நடிகை பானு. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவருடன் விஷால் பிரபு நதியா நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் . இந்த படமானது சூப்பர் ஹிட் அடுத்தது.

Banu 02

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மலையாள சினிமாவில் முக்தா  என்ற பெயரும் உண்டு. ஆறாவது படிக்கும் போதே மலையாள சீரியலில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய 14 வது வயதில் அச்சனுரங்காத  வீடு என்னும் மலையாள படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

Banu 03

இவர் தமிழில் அழகர் மலை ,சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்து நிலையில் சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்திருந்தார்.

Banu 04

அதன்   பிறகு பிரபல தொழிலதிபரான ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு கியாரா என்ற அழகான மகள் இருக்கிறார். தற்போது தனது மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் தாமிரபரணி பானுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.