அடக்கடவுளே…! பிஞ்சுக்குழந்தையின் இதயத்தில் 3 ஓட்டைகள்…. வாழ்க்கையே நின்றுபோனது… பிபாஷா பாசு கண்ணீர் வீடியோ…!!

0
9
bipasha basu emotional video
bipasha basu emotional video

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிபாஷா பாசு. இவர் நடிகர் கரன்சிங் குரோவர் என்பவரை கடந்த 2016 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது .

bipasha basu emotional video
bipasha basu emotional video

இந்த குழந்தைக்கு தேவி என்று பெயரிட்டார்கள் . இந்நிலையில் பிபாஷா தனது குழந்தை தேவிக்கு இதயத்தில் இருக்கும் பிரச்சனை குறித்து அவர் கண்ணீருடன் லைவ் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதாவது அவர் அளித்த லைவ் வீடியோவில், தேவி பிறந்த மூன்றாம் நாளில் அவளுடைய இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

bipasha basu emotional video
bipasha basu emotional video

அந்த ஓட்டை தானாக சரியாகிறதா என்று அடிக்கடி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். ஓட்டை பெரியதாக இருந்ததால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறினார்கள். மூன்று மாதங்கள் ஆகும் பொழுது ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

bipasha basu emotional video
bipasha basu emotional video

மகளுடைய எதிர்காலத்திற்காக இப்படி ஒரு முடிவை ஒப்புக்கொண்டேன். ஆபரேஷன் தியேட்டரின் வெளியே ஆறு மணி நேரம் என்னுடைய வாழ்க்கையை நின்று விட்டது போல இருந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து இப்பொழுது தேவி நலமாக இருக்கிறார் என்று கண்ணீரோடு கூறி பிபாஷா பாசு.

 

View this post on Instagram

 

A post shared by Freedom To Feed (@freedomtofeed)