“கேப்டன் மில்லர்” படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்..!!அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழுவினர்..!!!

0
16
captain miller first look release-01

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக இருப்பவர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.

captain miller first look release 02

இந்த நிலையில் இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே சாணி காகிதம், ராக்கி போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தினை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

captain miller first look release 03

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படமானது மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்தப் படத்தில்  கன்னட நடிகரான சிவராஜ்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் ஆறு மாதங்களாக நடித்து வந்த அவரது பாகமானது ஜூன் 19ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

captain miller first look release 04

இந்த நிலையில் இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் போர்க்களத்தில் சடலங்கள் சுற்றிலும் கிடக்க கையில் ஒரு பெரிய துப்பாக்கியுடன் வித்தியாசமான கெட்டப்பில் நிற்பதாக காட்சியளிக்கிறார். இந்த காட்சி ஆனது ரசிகர்களை வெகுவாக  கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ளது.