டப்பிங் ரூமில் திடீர்னு வந்த பேய்…. பயத்தில் நடுநடுங்கிய வடிவேலு…. வைரலாகும் பகீர் காட்சி…!!!

0
13
Chandramukhi 2-01

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில்  கடந்த 2005-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இதில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் ஆனா இந்த படம் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.

Chandramukhi 2 02

இந்நிலையில் தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி, பி.வாசு இயக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.

Chandramukhi 2 03

இந்த நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதன்படி நடிகர் வடிவேலு திரைப்படத்திற்கான வசனத்தை பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் சந்திரமுகி வசனத்தை ஒருவர்  பின்னால் போட்டு விடுகிறார். இதனால் திடுக்கென பயந்த வடிவேலு பதட்டத்துடன் பதிலளிக்கிறார்.

Chandramukhi 2 04

இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ எங்கு சென்றாலும் வடிவேல் போல் வராது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.