“இவர் தான் என் வருங்கால கணவர்”…. பிரபல நடிகரை மணக்கும் சீரியல் நடிகை சுபலட்சுமி…. குவியும் வாழ்த்துக்கள்…!!!!

சீரியல்களில் பில்லி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சுபலட்சுமி ரங்கன். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு குறும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் நடித்து வந்த இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவ்வகையில் யாரடி நீ மோகினி, அழகிய தமிழ் மகள் போன்ற சீரியல்களில் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் கண்மணி, அன்பே வா மற்றும் திருமதி ஹிட்லர் உள்ளிட்ட பல சீரியல் தொடர்களிலும் நடித்தவர். பொதுவாக இவருக்கு நெகட்டிவ் ரோல்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். அதனால் பெரும்பாலான சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட பிரீ வெட்டிங் போட்டோ சூட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.