சிறுவயதிலேயே செம கூலர்ஸ் போட்டுகொண்டு செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள நடிகர் விஜய்…..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜயின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா என்பதை பலரும் அறிந்திருப்போம். விஜய்க்கு வித்யா என்ற ஒரு தங்கையும் இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது சிறுவயதில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு தனது தாய் தந்தை மற்றும் தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.