திடிரென்று வந்து சப்ரைஸ் கொடுத்த சியான் விக்ரம் , சந்தோஷத்தில் ஆரவாரம் செய்த ரசிகர்கள், காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 களில் சேது , விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார் நடிகர் சீயான் விக்ரம்.
இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று அதிகாலையில் திரை அரங்கங்களில் வெளியானது , அதற்கு திடிரென்று ரசிகர்களை சந்தித்த விக்ரமின் காணொளி இதோ ..