நடிகை கௌதமியின் மகள் இவர்தானா…!!!! அழகுல அப்படியே அம்மாவை போலைவே இருக்காரே… இதோ புகைப்படம்…

கடந்த 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வசந்தமே வருக’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை கௌதமி.இதைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு நடித்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்ற கௌதமி தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கினார். தனது முதல் கணவரை பிரிந்த கௌதமி நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து 10 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் பிரிந்தனர். கௌதமி தனது மகளின் வருங்காலத்திற்காக இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் கூறியிருந்தார்.
நடிகை கௌதமியின் மகளை நாம் அவ்வளவாக பார்த்தது கிடையாது. அவரையும் சினிமாவில் நடிகையாக்கும் முயற்சியில் கௌதமி இறங்கியுள்ளாராம். இந்நிலையில் தற்பொழுது அவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…