நடிகை ப்ரணிதாவோட அழகான குழந்தைய பாத்துருக்கீங்களா…முதன் முதலில் அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ…
தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.தமிழில் இவர் 2011ல் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் கார்த்திக் [...]
Mon, 3 Oct 2022

தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.தமிழில் இவர் 2011ல் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான ‘மாஸ்’ படத்தின் பாடலால் மிகவும் பிரபலமானார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் 2021ல் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ப்ரணிதா வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்பொழுது நடிகை ப்ரணிதா தனது குட்டி தேவதையுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…