பொன்னியின் செல்வன் ஃப்ரீ ரிலீஸ் விழா….. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்….. வைரலாகும் வீடியோ….

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி ரிலீஸ் காக காத்துக் கொண்டிருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
செப்டம்பர் 30ம் தேதி வெள்ளித்திரையில் ரிலீஸ் ஆகும் ‘பொன்னியின் செல்வன்’ பிரம்மாண்ட திரைப்படத்திற்கான ஃப்ரீ ரிலீஸ் விழா தற்பொழுது நடைபெற்றுள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் ஃப்ரீ ரிலீஸ் விழா கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான், விக்ரம் , திரிஷா , கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.