மறைந்த பின்னணி பாடகர் SPB – யின் மகளா இவங்க .? சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவும் புகைப்படம் இதோ ..

தென்னிந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வளம் வந்தவர் SPB இவருடைய பாடல்கள் இல்லாத கேசட் ஒன்று இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமா தாண்டி பல மொழிகளில் பாடியுள்ளார் பாடகர் SPB அவர்கள். இசை கச்சேரி மற்றும் பல விதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார் பாடகர் SP பாலசுப்ரமணியம் ,
அது மட்டும் இன்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள SPB கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உடல் நல குறைவால் SPB அவர்கள் ம ரணம் அடைந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது மக்களுக்கும், இசை உலகிற்கும் ஒரு பெரிய இ ழப்பாக அமைந்தது என்று சொல்லலாம்.இதனைத் தொடர்ந்து எஸ்.பி. பாலசுப்பிர மணியத்தின் மகன் சரண் பின்னணி பாடகராக இருந்து வருகின்றார் . அவரை நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், எஸ்.பி.பி யின் மகள் பல்லவியை இதுவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் கிடையாது. சமூக வலைத்தளங்களில் வெளியான அவரது புகைப்படம் இதோ ..