வருங்கால கணவருடன் ஆகாயத்தில் பரந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

நடிகை பிரியா பவானி ஷங்கர், பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல்” வரை சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் இவர் என்று சொல்லாம். மேலும், நடிகர் வைபவ் நடித்த “மேயாத மான்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார், பிறகு நடிகர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர்,
நடிகர் அருண் விஜய்யுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், சமீபத்தில் தான் நடிகர் அருண் விஜய்யுடன் யானை, மற்றும் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் பொம்மை, பத்து தல, இந்தியன் 2, ருத்ரன் ஆகிய படங்கள் வருகைக்காக காத்துக்கிடக்கின்றன.
இந்நிலையில் இவர் ராஜவேல் என்ற நபரை காதலித்து வருகிறார், அவருடைய வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள இவர், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார், இந்நிலையில் இவர் ஆகாயத்தில் ஸ்கை டைவிங் செய்துள்ளார். மேலும், “இதை செய்ய சொன்ன காதலருக்கு நன்றி” என்று கேப்டின் போட்டுள்ளார் நடிகை பிரியா.