‘ஹாட் பாத் டப்’ புகைப்படங்களை வெளியிட்ட சூர்யா பட நடிகை…. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

இப்பொழுது நடிகைகள் தங்களது விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வது வழக்கமாகிவிட்டது. அங்கு சென்று கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தங்களது இணையதள பக்கத்தில் வெளியிடுகின்றனர். அந்த வகையில் நடிகை பிரணிதா சுபாஷ் தன் கணவர் நிதின் ராஜுவுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு புகைப்படங்களை எடுத்து தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை பிரணிதா சுபாஷ் ஒரு கன்னட நடிகை. இவர் தமிழில் ‘உதயன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சகுனி ,மாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இறுதியாக ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்துள்ளார். இவர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான நித்தின் ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதத்தில் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சில மாதங்களே ஆன பிராணிதா சுபாஷ் தற்பொழுது தனது விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அவ்வப்போது இணையதளபக்கத்தில் வெளியிடுவார்.
தற்பொழுது பாத் டப்பில் மகிழ்ச்சியோடு குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
View this post on Instagram