“அடேங்கப்பா. என்ன கூட்டம்-டா சாமி”… திருச்சியில் மக்கள் வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விக்ரம்…

தென்னிந்திய தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் சீயான் விக்ரம் அவர்கள். இவர் என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளிவந்த “சேது” என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது, என்று தான் சொல்ல வேண்டும்.இவரது நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
விரைவில் இவ்விரு படங்களும் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் இவர் கோப்ரா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக திருச்சி சென்றார் , அப்பொழுது விமான நிலையத்தில் இவரை பார்க்க ரசிகர் கூட்டம் அலை மோ தியது , அதின் காட்சிகளை நீங்களே பாருங்க