நிஜத்தில் நடந்த ok ok சீன்… நைட் 2 மணி வரை நொந்துபோய்ட்டேன்…. நடிகர் சந்தானம் கலகல பேச்சு…!!

0
14
#image_title

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் இவருடைய பேச்சுக்கும் டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படத்தினையும் தயாரித்து வருகிறார். இவர் தில்லுக்குதுட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெற்றி படங்களாக அமைந்தது. இவர் காமெடியானாக நடிப்பதை காட்டிலும் கதாநாயகனாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

comedy actor santhanam interview 1

இவருக்கு 2004 ஆம் வருடம் உஷா என்பவரோடு திருமணம் முடிந்தது ஹாசினி என்ற மகளும் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில், ஓகே ஓகே என்ற சீன் என்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்தது. விஜய் டிவியில் லொள்ளு சபா பண்ணி கொண்டிருக்கும் பொழுது நானும் என்னுடைய நண்பரும் இரவு வீட்டிற்கு கிளம்பினோம்.

comedy actor santhanam interview 2

அப்பொழுது போலீஸ் மடக்கி பிடித்தார்கள். பிடித்ததும் யாரு நீங்க? என்ன இந்த நேரத்தில் வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.  அப்போது விஜய் டிவியில் லொள்ளு சபாவில் நடிக்கிறோம் என்று சொன்னதற்கு அவர் அங்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டார். எந்த நடிகர் இருக்கிறாரோ அதேபோன்று நாங்கள் மிமிக்ரி பண்ணி பேசுவோம் என்று கூறினோம்.

comedy actor santhanam interview 3

அதற்கு அவர் பேசுங்கள் பார்க்கலாம் என்று கூறினார். நானும் பேசினேன் இது அவருக்கு ரொம்பவே பிடித்துப் போக நைட் இரண்டு மணி வரைக்கும். தம்பி இதுபோன்று பேசு நல்லா இருக்கு தம்பி தம்பி இப்படி பண்ணு அப்படி பண்ணு என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அப்பொழுதுதான் தெரியாமல் இருக்க மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்தேன். அதுதான் படத்தில் சீனாக எடுத்தார்கள் என்று கூறியுள்ளார்.