சந்தானம் படம் பார்க்க பாடையில் வந்த கூல் சுரேஷ்… ஷாக்கான ரசிகர்கள்….!!!

0
25
Cool Suresh Shah fans came to watch Santhanam movie

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருக்கும் சந்தானம். தற்போது வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். பீப்பிள் மீடியா, நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

Cool Suresh Shah fans came to watch Santhanam movie 02

இப்படத்தின் டிரைலர் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இம்மாதத்தின் முதல் வாரமான இன்று சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி, வித்தார்த்தின் டெவில் மற்றும் மறக்குமா நெஞ்சம், சிக்லெட்ஸ் என நான்கு படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இன்று சந்தானத்தின் வடக்கு பட்டி ராமசாமி படம் உலகம் முழுவதும் 600 திரைகளில் வெளியானது.

Cool Suresh Shah fans came to watch Santhanam movie 03

இந்நிலையில், சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்தை போடு என்று பேசியே பிரபலமானார். பத்து தல திரைப்படத்தை பார்க்க கூல் கூரேஷ் ஹெலிகாப்டரிலும், பொன்னியின் செல்வன் படம் பார்க்க குதிரையில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cool Suresh Shah fans came to watch Santhanam movie 04

இதையடுத்து, இன்று வெளியாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்த படத்தை பார்க்க வந்த கூல் சுரேஷ் பாடையில் படுத்துக்கொண்டு சந்தானத்தின் போட்டோவை கையில் வைத்துக்கொண்டு, மேளதாளத்துடன் போஸ் கொடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.