எனக்கு அந்த ஆசை வந்ததே இல்ல…. கூட இருக்குறவங்க அதை செஞ்சாலும் No சொல்லிருவேன்…. டிடி ஓபன் டாக்…!!

0
17
dd interview
dd interview

பிரபல தனியார் தொலைகாட்சி யான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீஸ்காந்த் என்பவரை 2014ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண விழா 3 நாட்கள் நடைபெற்றது. பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

dd interview
dd interview

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை கொஞ்ச நாள்களிலேயே ஶ்ரீகாந்த்தை விவாகரத்து செய்தார் டிடி. இப்படி டிடி திரையுலகில் ஜொலிப்பதற்காக இந்த இடத்திற்கு வருவதற்கு அவருடைய அக்காவான பிரியதர்ஷினி ஒரு ஆங்கராக பணியாற்றியது தான் காரணம். சமீபத்தில் பிரியதர்ஷினி உடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி உள்ளார் .

dd interview
dd interview

முதல் முறையாக கிளப்புக்கு செல்ல ஆசைப்பட்டு அப்பா அம்மாவிடம் கேட்டேன். அம்மா no சொன்னார். ஆனால் அப்பா நீ போ என்று கூறி கிளாமர் டிரஸ் போட்டுக்க அம்மாவுக்கு தெரியாமல் இருக்க மேலே ஒரு சட்டை போட்டுக்கோ என்றும் கூறினார். 11 மணிக்கு எனக்கு கால் பண்ணா போதும் என்று என்னை கிளப்பில் விட்டார்.

dd interview
dd interview

இன்னைக்கும் என்னை சுற்றி 100 பேர் குடிச்சாலும் எனக்கு குடிக்கணும்னு ஒரு ஆசை வந்ததே இல்லை. ஊத்தி கூட கொடுக்கலாம். நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் டிடி. ஆனால் அங்கே போய் சில மணி நேரத்திலேயே அப்பாவுக்கு கால் பண்ணி இங்கு இருக்க பிடிக்கல என்று கூறியதாகவும் அதிலிருந்தே பார்ட்டி என்றாலே வெறுப்பதாகவும் கூறியிருக்கிறார் டிடி.