வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே…! பல ஆண்டுகள் கழித்த பள்ளி நண்பர்களை சந்தித்த தனுஷ்…. வைரல் போட்டோஸ்…!!

0
12
dhanush reunion photos
dhanush reunion photos

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் தனுஷ். இவர் முதலில் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிற நிலையில் இவருக்கு ரஜினி பல உதவிகளை செய்து அவரை உச்ச நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு வந்தார்.

dhanush reunion photos
dhanush reunion photos

என்னதான் திறமை இருந்தாலும் சினிமாவில் மிகப்பெரிய ஆள் பலம் இருந்தால் தான்  எந்த தொந்தரவுகளும் இல்லாமல் முன்னேற முடியும் .அந்த வகையில் ரஜினி மருமகனுக்கு பல உதவிகளை செய்து  வந்துள்ளார். தற்போது ரஜினி கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அசுர உயரத்தினை அடைந்து விட்டார்.

dhanush reunion photos
dhanush reunion photos

ஆனால் இவருக்கும் இவரது மனைவியான ஐஸ்வர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு அதிகமாகி இருவரும் தனித்தனியே பிரிந்து விட்டனர். தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

dhanush reunion photos
dhanush reunion photos

இந்த நிலையில், தனது பள்ளி தோழர்களை சந்திக்க முடிவு செய்த தனுஷ், அதற்காக சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரீயூனியன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.அங்கு வருகைபுரிந்த பள்ளிப் பருவ நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.