தனுஷின் டி51 படப்பிடிப்பில் சிக்கல்….. திருப்பதியில் நடக்கும் படப்பிடிப்புக்கு எதிராக இறங்கிய மக்கள்…

0
23
Dhanushs D51 shoot is troubled by people protesting the shooting in Tirupati

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 51 வது படத்தில் நடித்து வருகிறார். டிஎன்எஸ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சேகர் கமூலா இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

Dhanushs D51 shoot is troubled by people protesting the shooting in Tirupati 02

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது தனுஷின் D51. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோரும் லீடிங் கேரக்டரில் நடித்து வருகின்றனர், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். D51 திரைப்படம் மும்பை மாஃபியா ஜானர் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

Dhanushs D51 shoot is troubled by people protesting the shooting in Tirupati 03

இந்நிலையில், D51 முதல் ஷெட்யூலில் தனுஷ் – நாகர்ஜுனா சம்பந்தப்பட்ட காட்சிகள் 4 நாட்கள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது திருப்பதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய D 51 படப்பிடிப்பிற்காக, திருப்பதி மலைப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Dhanushs D51 shoot is troubled by people protesting the shooting in Tirupati 04

இதனால் திருப்பதி மலைக்கு சென்றுகொண்டிருந்த வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக அப்பகுதி காவல்துறையினர் திருப்பிவிட்டுள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக திருப்பதி சென்ற மக்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் பழைய பாதையிலேயே வாகனங்கள் செல்ல அப்பகுதி காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.