மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண்விஜய் ? விடாமுயற்சி படம் குறித்து அருண்விஜய் என்ன சொன்னார் தெரியுமா ?

0
45
did arun vijay is a part of ajiths vidamuyarchi

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டு, அஜர்பைஜானில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. புத்தாண்டிற்காக ஷூட்டிங்கில் இருந்து படக்குழு பிரேக் எடுத்த நிலையில் படத்தின் நாயகன் அஜித் தன் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்று வந்தார்.

Arun vijay in Mission press meet

இந்தநிலையில் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் த்ரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்தநிலையில் விடாமுயற்சி படம் குறித்து சில விஷயங்களை மிஷன் பட விழாவில் நம்முடன் பகிர்ந்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

Arun vijay about vidamuyarchi

அருண் விஜய் கூறியுள்ளதாவது, எனக்கு மிகவும் பிடித்த நபர் அஜித். அவருடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு தான் என் கிராப் ஏறியது, எனக்கு நிறைய பட வாய்ப்புகள் அமைந்தது. மேலும், விடாமுயற்சி படத்தில் நடிக்க மகிழ் திருமேனி தன்னை கூப்பிடவில்லை என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். தான் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்ததால்தான் விடாமுயற்சி படத்தில் நடிக்க தன்னை மகிழ் திருமேனி அழைக்கவில்லை என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

Arun vijay about ajith

பாலாவின் படங்களில் நடிக்கும் நடிகர்கள், மற்ற படங்களில் கமிட்டாகக்கூடாது என்பதை அவர் மிகவும் கடுமையாக பின்பற்றி வருகிறார். இந்நிலையில் வணங்கான் படத்தில் நடித்து வந்ததால்தான் விடாமுயற்சி படத்தில் அருண் விஜய் நடிக்கவில்லை என்று அருண் விஜய் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் விடாமுயற்சி படம் மகிழ் திருமேனிக்கு தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த படமாக அமையும் என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.