மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா… நடிகர்களை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் இயக்குனர்…….

0
29
Do you know how much Manirathanas property is worth

மணிரத்னம் இந்தப்பெயரை கேட்டவுடனே நம் நினைவுக்கு வருவது சுருக்கமான வசனமும்,புதுமையான காதல் களமும் தான். 62 வயதான பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளரான இவர் 1983ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 35 வருடங்களாக திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

Do you know how much Manirathanas property is worth 02

இவர் தமிழில் 26 படங்களையும் இந்தியில் 6 படங்களையும், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படங்களையும் இயக்கியுள்ளார். 1983இல் மணி ரத்தினம் “பல்லவி அணு பல்லவி” என்றொரு கதையை எழுதினார் . இதை தயாரிக்க அவரது மாமா கிருஷ்ணமூர்த்தி முன்வந்தார். இந்த படம் அவருக்கு கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதாசிரியர் விருதை பெற்று தந்தது.

Do you know how much Manirathanas property is worth 03

அடுத்து 1986ஆம் ஆண்டு மணி ரத்தினம் எழுதி இயக்கிய மௌனராகம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது.இந்த படம் தான் மணிரத்தினம் என்ற சகாப்தத்தின் அடித்தளமாக மாறியது. மேலும் இந்த படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது, அதோடு ,மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை வாங்கித்தந்தது .

Do you know how much Manirathanas property is worth 04

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம், சுஹாசினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஒரு படத்துக்கு ரூ. 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதோடு சில படங்களில் ஷேரில் குறிப்பிட்ட தொகையை வாங்கி இருக்கிறார். இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் முழு சொத்து மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.