103 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்…. என்ன காரணம் தெரியுமா…????

0
37
Do you know the reason for the freedom fighter who got married for the second time at the age of 103

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான ஹபீப் நாசர் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகள் காலமான நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தன்னைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மனவருத்தத்தில் இருந்த அவர், 49 வயது நிரம்பிய ஃபிரோஸ் ஜஹான் என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவரும் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்த ஃபிரோஸ் ஜஹான் இரண்டாவதாக ஹபீப் நாசரை கரம் பிடித்துள்ளார். 103 வயதான ஹபீப் நாசரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஃபிரோஸ் ஜஹான் தெரிவித்தார்.

மேலும் ஹபீப் நாசரை திருமணம் செய்து கொள்ள தன்னை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் தானாக விரும்பியே அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கணவர் ஹபீப் நாசர் நலமுடன் இருப்பதாகவும், எந்த வித மருத்துவ பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், ஓராண்டு கழித்து அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.