விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய வடிவேலு…. என்ன கூறியுள்ளார் தெரியுமா…???

0
47
Do you know what Vadivelu said about Vijays political arrival

தமிழ் திரையுலகில் காமெடிக்கு பெயர்போன முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சிறிது காலம் படவாய்ப்புகளில் விலகியிருந்த இவர். தற்போது இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த “மாமன்னன்” திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது பகத் பாசில் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

Do you know what Vadivelu said about Vijays political arrival 02

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் வடிவேலுவின் தாயார் கடந்த ஆண்டு காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார். கோவிலில் வடிவேலுவை பார்த்த ரசிகர்கள் அவருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Do you know what Vadivelu said about Vijays political arrival 03

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு “அவ்வளவுதான்” என நக்கலாக பதிலளித்துவிட்டு கிளம்பிய வடிவேலுவை மடக்கிப் பிடித்த செய்தியாளர்கள் மீண்டும் அதுகுறித்த கேள்வியை அவரிடம் முன்வைத்தனர்.

Do you know what Vadivelu said about Vijays political arrival 04

அப்போது அவர் கூறியதாவது : “மக்களுக்கு நல்லது செய்வதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஏன் நீங்கள் கூட வரலாம். யாரும் அரசியலுக்கு வர கூடாது என சொல்ல முடியாது. டி ராஜேந்தர், ராமராஜன், பாக்கியராஜ் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். எல்லோரும் நல்லது செய்யத்தானே வந்தார்கள் என பதிலளித்தார்.