
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக பலம் வந்தவர் தான் ராஜ்கிரன்.இந்நிலையில் இவரின் மகள் திருமணம் தந்தையின் சம்மதம் இல்லாமல் நடந்து விட்டதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத், சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முனீஸ்வரர் ராஜா என்பவரை காதலித்து வந்ததாகவும்,
இவர்கள் தற்போது ராஜ்கிரன் குடும்பத்தின் சம்பந்தம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல சீரியல் நடிகர் சண்முகராஜாவின் உடன் பிறந்த சகோதரரான முனீஸ்வரர் ராஜா எந்த ஒரு இடத்திலும் தனது சகோதரர் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தற்போது சன் டிவியில் இவர் பெரும்பாலான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரன் மகள் ஜீனத் சமூக வலைத்தளம் மூலமாக இவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பிறகு காதலை இருவர் வீட்டிலும் கூறிய நிலையில் ராஜ்கிரன் குடும்பம் சம்மதிக்காததால்,
முனீஸ் ராஜா குடும்பத்தின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றதாகவும் பதிவு திருமணம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply