ஐயோ என்னாச்சு…? கதறி அழுது வீடியோ வெளியிட்ட எதிர்நீச்சல் நடிகை ஹரிப்பிரியா…. ஷாக்கில் ரசிகர்கள்…!!

0
15
haripiriya posted dubbing video-01

தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பாவி மருமகளாக கலக்கி வரும் ஹரிப்பிரியாவின் பஞ்ச் டயலாக்குகளும் அவருடைய டைமிங் காமெடியும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாகிவிட்டது.

haripiriya posted dubbing video 02

இதனால் இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரமே உருவாகிவிட்டது என்று சொல்லலாம். இவர் தன்னோடு பணிபுரிந்த சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விவகாரத்தும் செய்து விட்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

haripiriya posted dubbing video 03

இதுவரை 12க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்த இவருக்கு சன் டிவியின் பிரியமானவள் சீரியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கிடையில்  இணையதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்து வருகிறார்.

haripiriya posted dubbing video 04

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியா கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எல்லோரும் நந்தினிக்கு யார் டப்பிங் கொடுப்பது என கேட்கிறார்கள், அது வேறுயாரும் இல்லை நானே தான் என பதிவு செய்துள்ளார்.