சூர்யாவோடு நடிக்க ஆர்வமாக உள்ளேன்… அமீருக்கு இருக்கும் பெருந்தன்மை கூட சூர்யாவிற்கு இல்லை….!!!

0
25
I am interested to act with Suriya Suriya does not even have the generosity that Aamir has

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I am interested to act with Suriya Suriya does not even have the generosity that Aamir has 02

மேலும் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பருத்திவீரன் பட பிரச்சனையின் காரணமாக சூர்யா மற்றும் அமீர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று இணையத்தில் சர்ச்சை கிளம்பியது.

I am interested to act with Suriya Suriya does not even have the generosity that Aamir has 03

இப்படத்தின் இயக்குனரான வெற்றிமாறன் இது குறித்து பேசுகையில் அமீர் மற்றும் சூர்யா கண்டிப்பாக இணைந்து நடிப்பார்கள் என்று உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் அமீர் சூர்யா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். ” விருப்பு வெறுப்புகளை தாண்டி சூர்யாவை ஒரு நல்ல கலைஞனாக நான் மதிக்கிறேன் .அவருடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

I am interested to act with Suriya Suriya does not even have the generosity that Aamir has 04

தற்போது கருத்து வேறுபாடு இருந்தாலும் பெருந்தன்மையோடு இருவரும் நடந்து கொண்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது. மேலும் இந்த தகவலை அறிந்த அமீர் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.