யாருக்கு யாரை பிடித்திருக்கிறதோ…. திருமணம் என்பது இதுதான்…. நான் எப்படிப்பட்டவள் நீங்க சொல்லதீங்க…. விஜே டிடி ஆக்ரோஷம்…!!

0
13
interviewed by host dd
interviewed by host dd

பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீஸ்காந்த் என்பவரை 2014ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண விழா 3 நாட்கள் நடைபெற்றது. பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை கொஞ்ச நாள்களிலேயே ஶ்ரீகாந்த்தை விவாகரத்து செய்தார் டிடி.

interviewed by host dd
interviewed by host dd

அன்றைய நாளிலிருந்து இப்போது வரை டிடி விவாகரத்து குறித்த காரணங்கள் சமூக வலைதளத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் அதற்கு தற்போது டிடி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது என்னைப்பற்றி வரும் வதந்திகளுக்கு எல்லாம் நான் என்னுடைய சமூக வலைதளத்தில் சென்று பதில் கொடுப்பது கிடையாது. எனக்கு கல்யாணம் என்றால் தெரியத்தான் போகிறது. இல்லை என்றால் இல்லை என்பது தெரிய போகிறது.

interviewed by host dd
interviewed by host dd

10 வருடத்திற்கு முன்னதாக இருந்த திருமணம் குறித்து இப்பொழுது முற்றிலுமாக மாறி இருக்கிறது. திருமணம் எல்லோருக்குமானது கிடையாது. அது ஒரு சாதனை என்றெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது . திருமணம் என்பது எல்லோருக்கும் அவசியம். இந்த காலத்தில் யாருக்கு யாரை பிடித்திருக்கிறதோ யார் தனக்கு சரியான இருப்பார் என்று நினைக்கிறார்களோ அவரை சம்பந்தப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் அதை ஒரு சாதனையாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

interviewed by host dd
interviewed by host dd

என்னை பொறுத்தவரை அந்த மாதிரியான தொடர் கட்டமைப்புக்குள் என்றைக்குமே நான் சிக்கிக்கொள்ள மாட்டேன். அதை நான் முயற்சி செய்து தோல்வி அடைந்து விட்டேன். அதனால் எனக்கு அது சுத்தமாக வராது . என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதிகள் என்ற ரீதியில் நான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய விதி யாரையும் பாதிக்காது. நான் எப்படியானவள் என்பதற்கு நான் சான்றிதழ் கொடுக்கிறேன். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று பேசியுள்ளார்.