“ஹாப்பி பர்த்டே டூ யூ செல்லம்” குடும்பத்துடன் தனது மகனின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடிய ஜெயம் ரவி..!!! அழகான புகைப்படங்கள் இதோ..!!!

0
18
jayamravi celebrated his son birthday-01

நல்ல வாட்டசாட்டமான உடல் அமைப்பு , வசீகர முகம் என பார்த்தவுடன் பிடித்துப் போகும் முக அமைப்பை  உடைய ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார் .சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்த படத்தின் மூலம் பிரபலமானார்.

jayamravi celebrated his son birthday 02

அதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, தீபாவளி, தூம் தூம், பேராண்மை என வரிசையாக வெற்றி படங்களையே கொடுத்து மாஸ் நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இளவரசனாக வந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

jayamravi celebrated his son birthday 03

தற்போது இறைவன் ,முப்பதாவது படம், சீரன், கிருத்திகா உதயநிதி திரைப்படம் என தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியும், நடித்தும் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2009இல்  ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என இரண்டு மகன்கள் உள்ளனர் .சமீபத்தில் இவரது மனைவியான ஆர்த்தியின் பிறந்த நாள் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாலமாக கொண்டாடப்பட்டது.

jayamravi celebrated his son birthday 04

இந்நிலையில் தற்போது இவர் மகனான ஆரோவ்வின் 13 வது பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி செலபிரேட் செய்துள்ளார் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவருடைய மகனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.