முடிவுக்கு வந்த விஜய்யின் அரசியல் குழப்பம்…. தொலைபேசியில் வாழ்த்து கூறிய கமலஹாசன்…. ஆனந்தத்தில் ரசிகர்கள்….!!!

0
23
Kamal Haasan congratulated Vijays political chaos over the phone and the fans were happy

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

Kamal Haasan congratulated Vijays political chaos over the phone and the fans were happy 02

இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகம் தேவைப்படுகிறது என தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்

Kamal Haasan congratulated Vijays political chaos over the phone and the fans were happy 03

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்த நிலையில் அதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது வாழ்த்து செய்தியை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.

Kamal Haasan congratulated Vijays political chaos over the phone and the fans were happy 04

அதில் நடிகர் விஜய்யை, கமல்ஹாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகளும்’ என தெரிவித்தார்” என்று அக்கட்சி அதில் குறிப்பிட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கும் இது மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.