தளபதி விஜய்யுடன் நான்…. பல வருடங்களுக்கு பின் ரகசியம் பகிர்ந்த கத்ரினா கைப்

0
47
katrina kaif shares a secret about thalapathy vijay

இயக்குனர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்ரி கிறிஸ்துமஸ். ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதியும் கத்ரினாவும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

vijay and katrina in coco cola video

இந்தநிலையில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கத்ரினா கைப் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் விஜய்யுடன் நடித்து தான் என் கேரியரை ஆரம்பித்தேன். என்னுடைய முதல் விளம்பர படம் விஜய்யுடன் தான். அப்போது எனக்கு டான்ஸ் ஆட தெரியாது, ஏன் அதுகுறித்து எந்த அறிவும் இல்லாமல் தான் இருந்தேன். அப்போது தான் நான் விஜய்யை பார்த்தேன்.

katrina and vijay in coco cola video

அவர் சிறப்பாக நடனம் ஆடுவார், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அதன்பிறகு தான் நான் நடனம் கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார் கத்ரினா கைப். இதனால் குஷியான விஜய் ரசிகர்கள், நீங்கள் தளபதியடன் நடிக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.