கவின் திருமணத்தில் கலந்துகொண்ட இயக்குனர் நெல்சன் கூட்டணி…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…!!

0
9
kavin marriage photos viral-01

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் வருடம் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலமாக பிரபலமானவர் கவின். அதன் பிறகு தாயுமானவன், சரவணன் மீனாட்சி என்ற பல சீரியல்கள் நடித்து வந்தார்.

திருச்சியில் இருந்து வந்த இவர் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதேபோல வெள்ளி திரையில் காலடி வைத்த இவர் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை என்ற படத்தில் சின்ன கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸில் கலந்து கொண்டு பெரிய ரீச் அடைந்தார் கவின்.

அதன்பிறகு லிப்ட், டாட்டா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வளம் வந்தார். இதற்கு அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியாக நடித்து வருகிறார். பிக் பாஸில் லாஸ்லியாவை காதலி த்த கவின் வெளியே வந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் நேற்று  கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதில பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.