அன்பு அம்மாவிற்காக தாஜ்மஹால் கட்டிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான்…. இப்படி ஒரு நினைவிடமா என ஆச்சரியத்தில் உறையும் ரசிகர்கள்….!!!!

0
40
Fans wonder if AR Rahman the composer who built the Taj Mahal for Anbu Amma has such a memorial

தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசை ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்து வளர்த்தவர் அவரது தயார் கரீமா பேகம். இவர் கடந்த 2022ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இந்த இழப்பு ரஹ்மான் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான், ரஹ்மான் தனது தாயார் நினைவிடத்தை தாஜ்மஹால் போன்றதொரு வடிவமைப்பில் கட்டி எழுப்பியுள்ளார்.

Fans wonder if AR Rahman the composer who built the Taj Mahal for Anbu Amma has such a memorial 02

தனது தாயார் நினைவிடத்திற்கு சமீபத்தில் எழுத்தாளர் நாகூர் ரூமியை அழைத்துச் சென்றுள்ளார் ரஹ்மான். அங்கு சென்ற அனுபவத்தை நாகூர் ரூமி பகிர்ந்துள்ளார். ஜனவரி 26ந் தேதி திடீரென்று அவரது மேனேஜர் ஒருவர் என்னை அழைத்தார். ஜனவரி 27-ம் தேதி காலை கார் அனுப்புவதாகவும், ஏ ஆர் வீட்டுக்கு அவர் அழைத்திருப்பதாகவும் சொன்னார்.

Fans wonder if AR Rahman the composer who built the Taj Mahal for Anbu Amma has such a memorial 03

வீட்டிற்கு சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து வேனில் ஏறிக்கொண்டோம். வேன் ரெட்ஹில்ஸுக்கு அருகில் இருந்த ஒரு இடத்துக்குச் சென்றது. அங்கேதான் ரஹ்மானின் அன்பு அன்னையின் அடக்கஸ்தலமிருந்தது. ஆனால் ஏதோ தாஜ்மஹாலுக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது. நான் இன்னும் தாஜ்மஹாலைப் பார்த்ததில்லை.

Fans wonder if AR Rahman the composer who built the Taj Mahal for Anbu Amma has such a memorial 04

அவ்வளவு அழகாக அந்த இடம் இருந்தது. வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே சில படங்கள் அவரோடு எடுத்துக்கொண்டோம். அவர் அம்மாவின் அடக்கஸ்தலத்தை மிகவும் ‘ரிச்’ ஆக வைத்திருந்தார். அடக்கஸ்தலத்தின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையின் அழகு கண்ணைக்கவர்ந்தது.

Fans wonder if AR Rahman the composer who built the Taj Mahal for Anbu Amma has such a memorial 05

அதற்கு நேர் எதிரே அம்மாவின் வரைபடம் ஒன்றும் இருந்தது. யாரோ ஒருவர் குர்’ஆன் ஓதிக்கொண்டே இருந்தார். ஒரு யந்திரத்தில், திருமறை ஓதப்படும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் கல்லறைப் புகைப்படங்கள் பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.