என் ட்விட்டர் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க..!! குண்டை தூக்கி போட்ட ஹாரிஸ் ஜெயராஜ் ஷாக்கான ரசிகர்கள்…!!

0
51
Music director harris jayaraj twitter account got hacked

கவுதம் மேனன் மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே ஆல்பம் ஹிட்டாக தொடர்ந்து சாமி, காக்க காக்க, செல்லமே, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு என ஹிட் ஆல்பங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக வளம் வந்த இவர் சமீபத்தில் லெஜண்ட் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

harris twitter account got hacked

அடுத்தாக கவுதம் மேனனை துருவ நட்சத்திரம் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இதனிடையே இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹாரஸ் ஜெயராஜ், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். எனது ட்விட்டர் (இப்போது எக்ஸ்) அக்கவுண்டை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். 4 மாதங்களாக நான் ட்விட்டர் பயன்படுத்துவதில்லை என்று பதில் அளித்துள்ளார். அதேபோல் வேட்டையாளடு விளையாடு படத்தின் பாடல்கள் குறித்த கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

harris jayaraj about vettaiyadu vilaiyadu

முதன் முதலில் வேட்டையாடு விளையாடு பாடல் வெளியான போது, ‘’பார்த்த முதல் நாளே’’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஆனால் இப்போது அந்த பாடலை யாரும் ரசிப்பது போல் தெரியவில்லை. மாறாக ‘’மஞ்சல் வெயில்’’ பாடல் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

harris jayaraj about his fans

சாப்பாடு அதே தான் அதை சாப்பிடும் ரசிகர்களின் மனநிலை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறி வருகிறது என ஹாரி்ஸ் ஜெயராஜ் கூறியுள்ளார். ரசிகர்களின் ரசனை மாறினாலும், இசை மீது காதல் எப்பொழுதும் யாருக்கும் குறையாது என கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்