பள்ளியில் தனுஷ் மகனுடன் கேப்டன் பதவியேற்ற சிறுமி…. பிரபல நடிகரின் மகளா..? ரசிகர்கள் வாழ்த்து…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இருவரின் பிரிவிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் என்பதால் மகனின் ஆசைக்காக இருவரும் ஒன்றாக வந்திருந்தனர். இதனிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா, தனது பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவி ஏற்றிருக்கிறார்.
அதே பள்ளியில் இன்னொரு தமிழ் நடிகரின் மகளும் ஜூனியர் விளையாட்டு அணியில் கேப்டன் ஆகியுள்ளார். அதாவது தனுஷின் மகன் யாத்ரா சீனியர் விளையாட்டுக்கான அடியின் கேப்டனாகவும் ஜூனியர் விளையாட்டு அணியில் அர்னா கேப்டன் ஆகியுள்ளார்.அந்த சிறுமி வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் எஸ்வி சேகரின் பேத்தியும் அவருடைய மகன் நடிகர் அஸ்வின் சேகரின் மகள் தான் அர்னா.
இதனைத் தொடர்ந்து எஸ்வி சேகர் தன்னுடைய இணையதள பக்கத்தில் தன்னுடைய பேத்திக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் தனுஷின் மகன் யாத்ரா மற்றும் அஸ்வினின் மகன் அர்ணாஇருவரும் தாங்கள் படிக்கும் பள்ளியின் விளையாட்டு அணியில் கேப்டன் ஆகி இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரல் ஆக்கி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.