விஜயகாந்திற்காக நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல்… கண்ணீர் விட்டு கதறிய பிரபாகரன்…..!!!

0
36
Prabhakaran broke down in tears at the memorial service organized by the actors association for Vijaykanth-01

தமிழ் சினிமாவிற்கே பெரிய இழப்பு என்றால் அது விஜயகாந்தின் மறைவு தான். ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த நிலையிலும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Prabhakaran broke down in tears at the memorial service organized by the actors association for Vijayakanth 02

இந்நிலையில் நேற்று நடிகர் சங்கம் சார்பாக விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்கள், விஷால் , நாசர், கார்த்தி, சிம்ரன், விக்ரம், ஜெயம் ரவி போன்ற திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Prabhakaran broke down in tears at the memorial service organized by the actors association for Vijayakanth 03

அந்த இரங்கல் கூட்டத்தில் மேடையில் ஏறி பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க தன் சோகத்தை வெளிப்படுத்தினார். அதாவது என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்ததை விட என் அப்பா முகத்தைத்தான் அதிகமாக பார்த்து வளர்ந்திருக்கிறேன் என்று கண்ணீர் சிந்தியுள்ளார்.

Prabhakaran broke down in tears at the memorial service organized by the actors association for Vijayakanth 04

அதுமட்டுமில்லாமல் எனது அப்பா மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியே எங்களை வளர்த்திருக்கிறார். பல சேனல்கள் கேப்டனுக்கு மறதி இருப்பதாகவும் யாரையும் அடையாளம் தெரியவில்லை என்றும் எழுதி வந்தார்கள். ஆனால் அதெல்லாம் வெறும் பொய்.

Prabhakaran broke down in tears at the memorial service organized by the actors association for Vijayakanth 05

மேலும் அவர் இறப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு கூட அவரது டிரைவரை அழைத்து அவர் நடித்த படங்களின் பாடல்களை போடச் சொல்லி அந்த பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார். அது எனக்கே தெரியாது. டிரைவர் சொல்லித்தான் தெரியும்.

Prabhakaran broke down in tears at the memorial service organized by the actors association for Vijayakanth 06

உடனே சிசிடிவியில் பார்த்தேன். அதில் விஜயகாந்த் அந்த பாடல்களை கேட்டுக் கொண்டே கையில் தாளம் தட்டி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என கண்ணீர் விட்டு கதறி உள்ளார். இதனை கேட்ட அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.