அடடே…! அம்மணிக்கு இது 2-ஆவதாமே…. பிரியா பவானி சங்கர் காட்டுல மழை தான் போங்க….!!

0
11
priya bavani sankar act in thelungu movie
priya bavani sankar act in thelungu movie

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தவர் பிரியா பவானி சங்கர் .இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

priya bavani sankar act in thelungu movie
priya bavani sankar act in thelungu movie

இதனை தொடர்ந்து அதிர்ஷ்டம் இவருடைய வீட்டுக்கதவை தட்டியது. ஆம்! இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது தமிழ் சினிமாவில் முதன்முதலாக மேயாத மான் படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார் பிரியா பவானி. இந்த படத்தை இயக்குனர் ரத்தினகுமார் இயக்கியிருந்தார்.

priya bavani sankar act in thelungu movie
priya bavani sankar act in thelungu movie

எதார்த்தமான காதல் கதையை சென்டிமென்ட் இணைத்து காமெடியாக உள்ள இந்த பட ரசிகர்களை கவிழ்ந்தது. இவருடைய அழகும் நடிப்பும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வரிசை கட்டி வந்தது. அதன் பிறகு மாபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்தார்.

priya bavani sankar act in thelungu movie
priya bavani sankar act in thelungu movie

தற்போது இவர் பீமா என்று தெலுங்கு படத்தில் கோபி சந்திற்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். கோபி சந்தின் 34 வது படமான இதை கன்னட இயக்குனரான ஹர்ஷா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இது அவருக்கு இரண்டாவது தெலுங்கு படமாகும்.