என்னது கல்யாணமா ? வதந்திகளுக்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா…!!!

0
39
rashmika cleras engagement rumour with vijay devarakonda

கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் நேஷனல் கிரஸ் ஆனவர் தான் ராஷ்மிகா மந்தனா. இன்கேம் இன்கேம் காவாலே பாடல் ஒலிக்காத இடமே இல்லை என சொல்லலாம் அந்தளவுக்கு அந்த பாடலும், படமும் ஹிட் அடித்தது. ஒரே இரவில் ஒபாமா என்பது போல் கீதா கோவிந்தம் என்ற ஒரே படம் மூலம் இந்தியா முழுக்க இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தனர் தான் ராஷ்மிகா மந்தனா.

Rashmika mandanna in animal

மகேஷ் பாபு, விஜய், அல்லு அர்ஜுன் , கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகாவுக்கு ஹிந்தி திரையுலகின் கதவுகளும் திறக்கப்பட்டது. சித்தார்த் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர் என எடுத்த எடுப்பில் பெரிய ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தார். ரன்பீர் கபூருடன் அவர் நடித்த அனிமல் படம் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியது.

Rashmika and vijay devarakonda in maldives

இப்படி கேரியர் நன்றாக போய் கொண்டிருக்க, அடிக்கடி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். இருவரும் முக்கிய பண்டிகைகளை கொண்டாடுவது, ஷூட்டிங் இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது என இருந்து வந்தனர். சென்ற வருடம் கூட கோவா, மாலத்தீவு போன்ற இடங்களுக்கு இருவரும் சுற்றுலா சென்று வந்தனர்.

Rashmika and vijay devarakonda in Vacation

இந்தநிலையில் வரும் பிப்ரவரி மாதம் இவர்களின் திருமண நிஸ்ஸயதார்தம் நடக்க உள்ளதாக ஒரு வதந்தி காட்டுத்தீ போல் பரவியது. எப்போதும் தன்னை பற்றி வரும் காதல் கிசுகிசுக்களை கண்டு கொள்ளாமல் இருந்து வரும் ராஷ்மிகா முதன்முறையாக இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ராஷ்மிகா மற்றும் விஜய் தேவ்ராக்கொண்டாவின் இருவரின் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Vijay devarakonda and Rashmika Engagement

அதன்படி, இது வெறும் வதந்தி தான் என இவர்களின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து டாப் படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருப்பதால் இப்போதைக்கு கல்யாணம் இருக்காது என அவர் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.