அடடே..! சமந்தாவுக்கு இனி நல்ல காலம் பொறக்கப்போகுதாமே…. அவங்களே சொல்லிட்டாங்கப்பா…!!!

0
9
samantha photos viral
samantha photos viral

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் சூர்யா, விஜய் என்று முன்னணி ஹீரோக்களோடு நடித்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர். தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். இவர் நடிப்பில் யசோதா மற்றும் சாகுந்தலம் படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்தது. சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

samantha photos viral
samantha photos viral

இதனையடுத்து தற்போது விஜய் தேவரகொண்டாவோடு சமந்தா நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சீட்டாடல்  என்ற வெப் தொடரிலும்  கமிட் ஆகியிருந்தார். இந்த நிலையில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா முன்னதாக சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். அப்போது இவர் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதிலிருந்து விலகி விட்டார்.

samantha photos viral
samantha photos viral 02

இந்த நிலையில் இவர் தன்னுடைய தோழியோடு வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அங்கு அவருடன் சேர்ந்து நடனம்  ஆடுவது, குரங்குடன் புகைப்படம் எடுப்பது போன்ற பல போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இப்படி தொடர்ந்து சிறந்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா தற்போது சிறப்பான பேக்கிரவுண்டில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

samantha photos viral
samantha photos viral

இந்த புகைப்படத்தில் அழகான நீச்சல் குளம் அருகே இருப்பது போன்றும் அழகான பழ தோட்டங்கள், பூந்தோட்டங்கள், பிள்ளையார் ஆகியவற்றையும் படமெடுத்து ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். மேலும் இனிமேல் தான் தனக்கு நல்ல நேரம் வரப்போவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.