அடப்பாவமே…! தாங்கிக்கொள்ள முடியாத கணவரின் திடீர் இறப்பு…. நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா வெளியிட்ட கண்ணீர் பதிவு…!!

0
11
sanmukapiriyaa who posted a tearful post about her husband
sanmukapiriyaa who posted a tearful post about her husband

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியல் மூலமாக பிரபலமானவர் ஸ்ருதி. அதன் பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, தொடங்கி பாரதி கண்ணம்மா வரை பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் பாடி பில்டர் ஆன இவர் ஜெயின் ட்ரெயினராகவும் வலம் வந்தார். இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் அதிக நாட்டம் கொண்டவர்.

sanmukapiriyaa who posted a tearful post about her husband
sanmukapiriyaa who posted a tearful post about her husband

இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் தான் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் இருவரும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்துக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

sanmukapiriyaa who posted a tearful post about her husband
sanmukapiriyaa who posted a tearful post about her husband

இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்  ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரை ஜோடிகளில் பலருடைய மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வந்த நிலையில் அரவிந்தின் மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது கணவரின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி சண்முக பிரியா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

sanmukapiriyaa who posted a tearful post about her husband
sanmukapiriyaa who posted a tearful post about her husband

அவரின் பதிவில், உங்கள் உடல் தான் பிரிந்துவிட்டது. உயிர் என்னுடன் இருக்கிறது. உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் அதிகரிக்கிறது, நீங்கள் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன், உங்களை மிகவும் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.