வேண்டாம் இப்படியெல்லாம் பண்ணாதீங்க…! அவரின் மரணத்திற்கு காரணம்…. கண்ணீர் வீடியோ வெளியிட்ட ஸ்ருதி சண்முகப்பிரியா…!!

0
8
shruthi shanmugapriya video realeased
shruthi shanmugapriya video realeased

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியல் மூலமாக பிரபலமானவர் ஸ்ருதி. அதன் பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, தொடங்கி பாரதி கண்ணம்மா வரை பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் பாடி பில்டர் ஆன இவர் ஜெயின் ட்ரெயினராகவும் வலம் வந்தார். இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் அதிக நாட்டம் கொண்டவர். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

shruthi shanmugapriya video realeased
shruthi shanmugapriya video realeased

மேலும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் இருவரும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் நேற்று அரவிந்துக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்  ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரை ஜோடிகளில் பலருடைய மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வந்த நிலையில் அரவிந்தின் மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

shruthi shanmugapriya video realeased
shruthi shanmugapriya video realeased

இந்நிலையில் ஸ்ருதி வெளியிட்டுள்ள வீடியோவில், வீட்டில் பல சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்த வீடியோவை நான் ஏன் போட்டுள்ளேன் என்பதை முதலில் கூறி விடுகிறேன். உண்மையில் அரவிந்திற்கு என்ன  நடந்தது என்பது பற்றி தெரியாதவர்கள் இதை ஒரு தகவலாக கூட எடுத்து கொள்ளலாம். ஆனால் உண்மை என்ன என தெரியாமல் சில youtube சேனல்கள்,  பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார். ஆனால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது இறந்து விட்டார்.

shruthi shanmugapriya video realeased
shruthi shanmugapriya video realeased

அவரின் மரணத்திற்கு காரணம் அது இது என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. அவர் ஒரு சிவில் இன்ஜினியர், பேஷனுக்காக தான் பாடி பில்டராக இருந்தார். இப்படியான தவறான தகவல்களால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாருமே வயதானவர்கள். இந்த விஷயத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் போது… தயவு செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என கூறியுள்ளார் .